முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற விஜேந்தருக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆசியபசிபிக் சூப்பர் மிடில் வெயிட்  குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரதமர் மோடி, டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய ஒரு நாள் கிரிக் கெட்அணி கேப்டன் டோனி வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லியில் உலக குத்துச்சண்டை அமைப்பின்  ஆசிய பசிபிக் குத்துச்சண்டை சாம்பியன்போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானாவைச்சேர்ந்த விஜேந்தர் சூப்பர் மிடில் வெயிட் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி சாம்பியனானார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்  உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசியா பசிபிக் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  நீங்கள் உங்களது வலிமை, திறன்  மூலம் எதிராளியை வீழ்த்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் ஆசியா பசிபிக் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி ,குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமணன், வீரேந்திர சேவாக், மற்றும் ஹரியானா முதல்வர்  மனோகர் லால் கட்டார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோரும் விஜேந்தருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோனி தனது வாழ்த்து செய்தியில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் முழுமையாக பார்த்த குத்துச்சண்டை போட்டியாக தாங்கள் போட்டியிட்ட ஆசிய பசிபிக் போட்டி இருந்தது. உங்களது வெற்றியால் இந்தியா பெருமிதம் அடைந்துள்ளது. உங்களது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை வெற்றியை தேடித்தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உங்களது போட்டியை முழு ஆர்வத்துடன் பார்த்தேன். வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஹரியானா முதல்வர் கட்டார் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், ஆசியா பசிபிக் சாம்பியன் பட்டம் வென்று ஹரியானாவிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், வாழ்த்துக்கள் விஜேந்தர் என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சேவாக் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,தங்கள் போட்டியை நேரில் பார்த்தேன். உங்கள் அற்புதமான திறன் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் லட்சுமணன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலக குத்துச்சண்டை அமைப்பின் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு உள்ளது . வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நீங்கள் மோதிய போட்டியை நேற்று இரவு டெல்லியில் நேரடியாக பார்த்து ரசித்தேன். இந்தியா பெருமிதம் அடைய தங்களது சிறப்பான வெற்றி அமைந்தது. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்