முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத ரத்னா விருதை திரும்ப பெறக்கோரிய விவகாரம்: டெண்டுல்கருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - பாரத ரத்னா விருதை திரும்பபெற வேண்டும் என சச்சின் டெண்டுல்கருக்கு எதிரான மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டின் முடிசூடா அரசனான சச்சின் டெண்டுல்கருக்கு 2014-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஓய்வுக்கு பிறகு முந்தைய காங்கிரஸ் அரசு அவரை கவுரவிக்கும் விதமாக இந்த உயரிய விருதை வழங்கியது. இதற்கிடையே பாரத ரத்னா விருதை டெண்டுல்கர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதனால் அதை திரும்ப பெற வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக போபாலை சேர்ந்த வி.கே.நாஸ்வா தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது., டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பின்னர் சில எழுத்தாளர்கள் அவரையே பாரத ரத்னா விருது போல சித்தரித்தும், தலைப்பிட்டும் புத்தகங்களை வெளியிடுகின்றனர். இந்த விருதுக்கு பின்னர் டெண்டுல்கர் வர்த்தக விளம்பரங்களில் நடிப்பது அதிகமாகிவிட்டது. இவையாவும் பாரத ரத்னா விருதுக்கான நற்பெயரை களங்கப்படுத்துவது போல் உள்ளது. மேலும் இந்த விருதுக்கான கவுரவத்தை பணம் சம்பாதிப்பதற்காக டெண்டுல்கர் பயன்படுத்தி வருகிறார்.

எனவே அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்தர சூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான அவர்கள் கூறி இருப்பதாவது., டெண்டுல்கரை பாரத ரத்னா விருதாக சித்தரித்து 3-வது நபர் புத்தகம் எழுதுவதற்கு விருது பெற்ற நபர் பொறுப்பாக முடியாது. மேலும் பாரத ரத்னா விருது பெற்ற நபர் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை தெரிவிப்பதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்