முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரிசன டிக்கெட்டில் முறைகேடு: திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரையும் தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள சுபதம் வாயில் வழியாக கைக்குழந்தையின் பெற்றோர்கள் வெளிநாட்டு பக்தர்கள் மாற்றுத் திறனாளிகள், ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்றவர்கள் ராணுவ வீரர்கள் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வழியில் தரிசனத்துக்கு செல்பவர்களை அங்கு பணியில் உள்ள தேவஸ்தான அதிகாரிகள் பரிசோதித்து அனுப்புவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுபதம் தரிசன வரிசையில் முறைகேடுகள் நடப்பதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. இது குறித்து விசாரிக்க கண்காணிப்பு போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்கள் விசாரணை நடத்தியதில் இளநிலை அலுவலர் குருமூர்த்தி, உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் பழைய தரிசன டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் பெயர், தரிசன நேரத்தை குறிப்பிட்டு புதிய டிக்கெட் போன்று பிரிண்ட் அவுட் எடுத்து பக்தர்களுக்கு கூடுதல் தொகைக்கு விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் திருமலை போலீசார் கைது செய்தனர். தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரையும் தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்