முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபாவில் எதிர் கட்சிகள் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  பாராளுமன்றத்தில்  இரு அவைகளின் கேள்வி நேரமும் இடையூறு இல்லாமல் சுமூகமாக நடந்த போதும் ராஜ்ய சபாவில் ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்குப்படும் நிதி குறித்து எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  லோக் சபாவில், அ.தி.மு.க.எம்.பி. ஜெயசிங் நட்டர்ஜி சென்னை ஐ.ஐ.டிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று பாராளுமன்றம் துவங்கிய போது ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. பகவந்த் சிங் மான் பாராளுமன்ற வளாகத்தினை படம் பிடித்தது தொடர்பாக லோக்சபாவில் இருந்து  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 பகவந்த் மான் விவகாரம் குறித்து 9 உறுப்பினர் கொண்ட கமிட்டி விசாரணை செய்கிறது. இந்த கமிட்டிக்கு பா.ஜ.க.எம்.பி. கீர்த்தி சவும்மியா தலைமை தாங்குகிறார். இந்த கமிட்டி முடிவு  எடுக்கும் வரை அல்லது இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை பகவந்த் சிங் மான் சஸ்பெண்ட்டில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பெட்ரோல் டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பினார். சர்வதேசச்சந்தையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ள போதும் இந்தியாவில் இந்த எண்ணெய் விலை அதிகரித்து இருப்பது ஏன் ? என அவர் கேட்டார்.

தலித்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராஜ்ய சபாவில் வெளி நடப்பு செய்தது. இது குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியது. ராஜ்ய சபாவிற்கு மீண்டும் தேர்வு பெற்றுள்ள மத்திய அமைச்சர் ஒய்.எஸ். சவுத்ரி பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.  சவுத்ரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஆவார். அவர் தெலுங்கில் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்து வருகிறது என்று இடது கம்யூனிஸ்ட் எம்.பி. தபன் குமார் சென் (சி.பி.எம்.) குற்றம் சாட்டினார்.

பி.எஸ்.என்.எல். மற்றும் மகா நகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் ஆகிய அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு முயற்சி எடுக்கிறது. இதனை நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார். ஆந்திர மாநில சிறப்பு நிதி ஒதுக்கடு குறித்து, உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. இதனால் அவை மதியம் 2.38மணி முதல் மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் மாலை அவை 3.30 மணிக்கு  ராஜ்ய சபாவில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில்  அ.தி.மு.க.எம்.பி. ஜெயசிங் நட்டர்ஜி சென்னை ஐ.ஐ.டிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்