முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது: ராஜ்நாத்திடம் தேசிய மாநாடு கட்சி குழு வலியுறுத்தல்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,  காஷ்மீரில் துப்பாக்கிக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று அந்த ஜம்மு மாநில எதிர் கட்சியான தேசிய மாநாடு கட்சியின் 6 உறுப்பினர் கொண்ட குழு உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் வலியுறுத்தியுது.

காஷ்மீரில் கடந்த 47 நாட்களாக வன்முறைகளும் பதட்டமும் காணப்படுகின்றன. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அந்த பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் இதுவரை இரண்டு போலீசார் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் நிலவரம் மிக மோசமாகியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று ஸ்ரீநகருக்கு வந்தார். அவர் காஷ்மீர் நிலவரம் குறித்து, துணை நிலை ராணுவம், ராணுவம், அரசு அதிகாரிகள், மற்றும் பல தரப்பு அரசியல் கட்சியனருடன் விவாதித்தார். இந்த நிலையில் காஷ்மீரில் துப்பாக்கிக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று அந்த மாநிலத்தின் முக்கிய எதிர் கட்சியான தேசிய மாநாடு கட்சியின் 6 உறுப்பினர் குழு ராஜ்நாத் சிங்கை சந்தித்து வலியுறுத்தியது.

தலைநகர் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் சந்தித்து பேசிய பின்னர் காஷ்மீரின் நிலைமையின் தீவிரத்தை மத்திய அரசு உணர்ந்து நடவடிக்கை எடுப்பது குறித்து தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா நன்றி தெரிவித்தார். ஸ்ரீநகர் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி உடன் வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்