முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா வன சரணாலயத்தில் 7 வயது ஆண் புலி குடும்பத்துடன் மாயம்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

நாக்பூர்  - மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள உம்ரெட் கர்ஹாண்ட்லா வனவிலங்குகள் சரணலாயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 7 வயது ஆண் புலியான ஜெய் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து புலியின் நிலவரம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் மாநில வனத்துறை அமைச்சர் சுதீர் முன்கனிதிவார் விளக்கம் கேட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜக எம்பி யான நானா பட்டேலும் இந்த விவகாரம் தொடர்பாக உண்மையை கண்டறிய பிரதமரை சந்தித்து மனு அளிக்கவும் முயன்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘‘வனவிலங்குகள் தொடர்பான எந்தவொரு உயரிய முடிவையும் எடுக்கும் அதிகாரம் தேசிய வனவிலங்கு வாரியத் தலைவரான பிரதமருக்கே இருக்கிறது. எனவே அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து பேச முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் பல்வேறு பணிகளில் அவர் இருப்பதால் என்னால் சந்திக்க முடியவில்லை. எனினும் பிரதமர் அலுவலகத்திடம் இது தொடர்பாக கடிதம் அளித்துள்ளேன்.

ஆண் புலியான ஜெய் மட்டுமின்றி அதன் தந்தை டேன்டூ, தாய் ஆல்பா, தாத்தா ராஷ்ட்ரபதி, உடன் பிறந்த வீருவும் காணவில்லை. வனதுறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே ஒட்டுமொத்த புலிக் குடும்பமும் தற்போது காணாமல் போயுள்ளது’’ என்றார். இதைத் தொடர்ந்து உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் சுதீர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்