முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் மூழ்கி கப்பல் ரகசியங்கள் வெளியானது பெரும் கவலை அளிக்கும் விஷயம் அல்ல : மனோகர் பாரிக்கர்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -  நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்கள் வெளியானதில் பெரும் கவலை இல்லை. இருப்பினும் இந்த பாதுகாப்புத்துறையில் இந்த  ரகசிய தகவல்கள் வெளியானது மிகவும் மோசமான நிகழ்வாக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். இந்திய கடற்படை பிரான்சு நிறுவனத்துடன் இணைந்து 6 நீர் மூழ்கி கப்பல்களை மும்பை பகுதியில் கட்டுமானம் செய்து வருகிறது. இந்த கப்பல்கள் கட்டுமானம் குறித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள நாளிதழின் இணையத்தளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்திய நீர்  மூழ்கி கப்பல்களின் கட்டுமான ரகசியங்கள் வெளியானதாக தகவல் வந்ததைதொடர்ந்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார்.

 இந்த விசாரணையை கடற்படை தளபதி நடத்துகிறார். இந்த நிலையில் அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  நீர் மூழ்கி கப்பல்கள் கட்டுமானம் குறித்து, ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பெரும் கவலை அளிக்கும் விஷயம் அல்ல. ஆஸ்திரேலியாவில் உள்ள நாளிதழின் இணையதளத்தில் இந்த கப்பல்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மற்ற ஊடகங்கள் குறிப்பிட்டதைப்போல முக்கிய விவரங்கள் எதுவும் இல்லை. வெளியான தகவல்களில் கப்பல்களில் உள்ள ஆயுத விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மும்பை கடல் பகுதியில் பிரெஞ்சு நிறுவனத்துடன் மசாகன் கட்டுமானத்தளத்தில்  3500கோடி டாலர் மதிப்பில் 6 அதி நவீன நீர் மூழ்கி கப்பல்கள் கட்டப்படுகின்றன. இந்திய ரூபாயில், இந்த நீர் மூழ்கி கப்பல்கள்  ரூ 2லட்சத்து 45ஆயிரம் கோடியில் கட்டப்படுகின்றன.
இந்த தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து பிரான்சும் விசாரணை செய்ய வேண்டும் என இந்தியா தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்