முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்கிராம் ஜெட் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி- பிரதமர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  ஸ்கிராம் என்ஜின்  சோதனை வெற்றி அடைந்ததைத்தொடர்ந்து இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர். ஆக்ஸிஜனைக் கொண்டு இயங்கும் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். .

வழக்கமாக ராக்கெட்டுகள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும்.

'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும், எடை குறையும், திறன் அதிகரிக்கும். இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும்.

இந்த ஸ்கிராம் ஜெட் என்ஜின் பரிசோதனை வெற்றி அடைந்ததைத்தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

ஏ.டி.வி எனப்படும் அதி நவீன தொழில் நுட்ப வாகனத்தை வெற்றி கரமாக இயக்கி இருக்கிறீர்கள். இந்த சாதனைக்கு தேசம் பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ள  வாழ்த்து செய்தியில் விஞ்ஞானிகளின் சாதனைகளால் நாடு பெருமிதம் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்