முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 ஹார்பூன் ரக ஏவுகணைகள் இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்திய நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 22 ஹார்பூன் ரக ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஹார்பூன் ஏவுகணை வழங்குமாறு இந்தியா 2014-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை பரிசீலித்த அமெரிக்க அரசு, இவ்வகை ஏவுகணைகளை தயாரிக்கும் போயிங் நிறுவனத்திற்கு பச்சைகொடி காட்டியதையடுத்து, ஏவுகணை விற்பனைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 8 கோடி டாலர் மதிப்புள்ள 22 ஹார்பூன் ரக ஏவுகணைகளை போயிங் நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கவுள்ளது. ஏவுகணைகளை வழங்கும் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்