முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதற்றம் ஏற்படுத்தும் பாகிஸ்தான் அணு ஆயுதம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியா பொறுப்புள்ள அணுசக்தி நாடாக உள்ள நிலையில், பாகிஸ் தானின் அணு ஆயுதங்களோ பதற்றம் ஏற்படுத்தும் வரலாறு கொண்டதாக உள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.  இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளில் அணு ஆயுத பிரச்சினையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ் தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாறு கொண்டவையாக உள்ளன.  அதேநேரம், அவை அமெரிக் காவுக்கு நேரடியாக அச்சுறுத் தலை ஏற்படுத்தவதாக இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்து வதற்காக அந்த நாட்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அதிகரிப்பதற்கு அமெரிக்கா பெரிய அளவில் உதவவில்லை. ஆனால் மற்ற நாடுகள் உதவி வருகின்றன. இதுபோல வட கொரியாவின் அணுசக்தி தொழில் நுட்பமும் கவலை அளிப்பதாக உள்ளன.  இந்தியாவைப் பொருத்தவரை அணுசக்தி தொழில்நுட்ப விவ காரத்தில் பொறுப்புள்ள நாடாக நடந்து கொள்கிறது. அதேபோல, சீனாவின் அணு ஆயுதங்கள் அளவும் தரமும் அதிகரித்தாலும், அவை தொழில்முறை ரீதியில் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 இந்திய வீரர்கள் பலியாயினர்.  இதையடுத்து இரு நாடு களுக்கும் இடையே கருத்து மோதல் மற்றும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறும்போது, “இந்தியாவும், பாகிஸ்தானும் வார்த்தைப் போரை கைவிட வேண்டும்.

பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முற்பட வேண்டும். இரு நாடு களுக்கிடையிலான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அதேநேரம், பாகிஸ்தானில் இருந்தபடி சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வரு கின்றன. அந்த அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்