முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.எஸ். முறை பற்றி யோசிக்க வேண்டும்: விராட் கோலி

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டி.ஆர்.எஸ். முறை பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என்று இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் டி.ஆர்.எஸ். என்ற முறையை ஏற்றுள்ளன. இந்தியா மட்டும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொண்டதில்லை. இந்த முறையின் சோதனை ஓட்டம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது நடைமுறைப் படுத்தப்பட்டது. அப்போது இந்தியா பேட்டிங் செய்யும்போது நடுவர்கள் அவுட்இல்லை என்று கூறிய பெரும்பாலான எல்.பி.டபிள்யூ.-க்கு டி.ஆர்.எஸ். முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் இந்தியா தோல்வியை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது.

இதனால் அப்போது இந்திய அணியில் விளையாடிய சச்சின் தெண்டுல்கர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் கேப்டனாக இருந்த டோனியும் இந்த முறையை எதிர்த்தார். டி.ஆர்.எஸ். முறை 100 சதவீதம் சரியானதாக இல்லை. இதனால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இந்திய கிரிக்கெட் வாரியமும் இதை எதிர்த்தது. எல்.பி.டபிள்யூ. முறையைத் தவிர மற்ற அவுட்டுகளுக்கு (கேட்ச்) கொண்டு வரலாம் என்றது. ஆனால், எல்.பி.டபிள்யூ இல்லாமல் மற்ற முறைக்கு கொண்டு வர இயலாது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

ஆனால், இவர்கள் கருத்தில் இருந்து தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி மாறுபடுகிறார். இவர் டி.ஆர்.எஸ். முறை குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும் என்கிறார். இதற்கு காரணம் உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2014-15 டெஸ்ட் தொடரின்போது அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தவான் மற்றும் ரகானே ஆகியோர் அவுட் இல்லை. ஆனால் அம்பயர் விக்கெட் வழங்கிவிட்டார். இதனால் இந்தியாவின் வெற்றி பறிபோனது.

இதேபோல் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கெதிரான காலே போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 2-வது இன்னிங்சில் இலங்கை அணியின் திரிமானே, சண்டிமால் ஆகியோர் ஒற்றையிலக்க ரன்னில் அவுட்டாகியிருக்க வேண்டும். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்காததால் இருவரும் நிலைத்து நின்று விளையாடி இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டார்கள்.

இதனால்தான் டி.ஆர்.எஸ். முறை குறித்து யோசிக்க வேண்டும் என்று கோலி கூறுகிறார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘வருங்காலத்தில் இந்தியா டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்துவது குறித்த யோசனையை தொடங்கி, முறைப்படியான டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.

நமக்கு நடந்த சம்பவம் (அடிலெய்டு மற்றும் காலே டெஸ்ட்) குறித்து சரி அல்லது தவறு என்று இங்கே நான் சொல்லமாட்டேன். ஆனால், இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். அந்த விஷயம்தான் எங்களை கூட்டத்தை கூட்டச் செய்தது. இதில் உள்ள சில அம்சங்கள் குறித்து விவாதிக்க முடியும் என்பதை உணர்ந்தோம். குறிப்பாக பால்-ட்ராக்கிங் மற்றும் ஹாக்ஐ தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க முடியும். என்னுடைய தனிப்பட்ட கருத்தும் அதுதான்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்