முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகாபுதீன் ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது- மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி, கொலை வழக்கில் கைதாகியுள்ள சர்ச்சைக்குரிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சகா புதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 தாதாவாக இருந்து அரசியல் வாதியாக ஆன சகாபுதீன் சரண் அடைய வேண்டும். அல்லது பீகார் போலீஸ் உடனடியாக அவரை கைது செய்த காவலில் வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டிருந்தது.

 சட்ட விதிமுறைப்படி  ராஜீவ் ரோஷன் கொலை வழக்கை பீகார் மாநில அரசும்  கீழ் நீதிமன்றமும் விரைவாக நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட நீதிபதிகள்  பி.சி.கோஷ், அமித்வா ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வாயம் நேற்று  உத்தரவிட்டது.

 ரோஷன் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சகாபுதீனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என இன் னொரு மனு சுப்ரிம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணையில் சகாபுதீன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்ற ம் ஜாமீன் அளித்திருந்தது. அந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் சகாபுதீன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 பீகாரில் ராஷ்ட்ரி யஜனதா தள கட்சியுடன் கூட்டணி அரசு நடத்தும் முதல்வர் நிதிஷ் குமார் அரசுக்கும் நாட்டின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு வழக்குகளில் சகாபுதினின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பீகார் மாநில அரசு உரிய ஆர்வம் காட்டாத நிலையில் சுப்ரீம் கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்