முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது.  இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு  பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவராக சோனியாக் காந்தியும், துணைத் தலைவராக ராகுல் காந்தியும் இருந்து வருகிறார்கள். சோனியாவுக்கு உலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சுற்றுப்பணம் மேற்கொள்ளவில்லை. ராகுல் காந்தி உத்திரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டசபை  தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். எனவே சோனியாவுக்கு பதில் ராகுல் காந்திக்கு தலைவர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் ராகுல் காந்தி தலைமை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்ப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை வருகிற நவம்பர் முதல் வாரத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதில் என்னென்ன விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தலைவர் பதவியை பொறுத்தவரை சோனியாவே நீடிப்பார் என்றும், அவருக்கு பதவி நீடிப்பு வழங்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் ராகுல் காந்தி தலைவராவது தள்ளிப்போகிறது என்றாலும் அவருக்கு செயல்தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மாநிலத்தில் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். எனவே கட்சியை காப்பாற்ற வேண்டிய விசயங்கள், தேர்தல் வியூகம் போன்றவை குறித்தும் காரிய கமிட்டிக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிகப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்