முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கேரளா ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் : தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக விதிமுறைகளை மீறி கேரள அரசு ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்டெடுக்கும் வகையில், உத்தரவுப் பிறப்பிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தை கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கூடுதலாக எதிர் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக கேரள அரசு ஆக்கிரமித்துள்ள இடமானது, 1886-ம் ஆண்டு குத்தகை ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமானது என்றும், இது மத்திய அரசின் நிலஅளவை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பான கேரள அரசின் முயற்சிக்கு தடைவிதிப்பதுடன், கேரள அரசினால் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டெடுக்க ஏதுவாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் கூடுதல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெ.எஸ். கெஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் விசாரணைக்கு அனுமதித்தனர். தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்