முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மதுரை திருப்பரங்குன்றம்

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - புகழ்பெற்ற ஆன்மிகத்தலமான மதுரை திருப்பரங்குன்றத்தை புராதன நகரமாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால், தற்போது அந்நகரமே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதற்காக, முதல்வருக்கு பக்தர்களும், பொதுமக்களும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தை, முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் விதிஎண் 110-ன் கீழ், புராதன நகரமாக அறிவித்தார். மேலும், அங்கு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணையிட்டார். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்றவாறு, சரவணப் பொய்கை தூர்வாரப்பட்டு, தெப்பக்குளத்தைச் சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகளுடன், புதிய எல்.இ.டி. விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதை முழுவதிலும் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், உயர்மின் கோபுர விளக்குகளும், எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றமே தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஆன்மிகத் தலமான திருப்பரங்குன்றத்தை புராதன நகராக அறிவித்து, அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தித் தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பக்தர்களும், பொதுமக்களும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்