முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் பக்தர்கள் அறைகள் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், திருமலையில் தேவஸ்தான அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் தேவஸ்தான விடுதி அறையில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய, டெபாசிட் தொகையாக முன்பணம் வாங்கும் முறை கடந்த 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக திருப்பதியில் தேவஸ்தான அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏதுனும் ஒரு அடையாள அட்டை அவசியம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய கடந்த ஜூலை மாதம் முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்