முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர் கைது - பாக். தூதரக அதிகாரியும் பிடிபட்டார்

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எல்லையில், ராணுவ பாதுகாப்பு குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பாக். தூதரக அதிகாரியையும் கைது செய்த போலீசார், பின்னர் விடுவிக்கப்பட்னர்.

எல்லை பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினரும், இந்திய ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க கண்காணித்து வருகிறார்கள். இந்த எல்லைப்பகுதிகளில், உள்ள ராணுவ நிலைகள் குறித்த வரைபடம் மற்றும் ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு விற்றுவந்த இரு நபர்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு தகவல்களை அனுப்பி வந்த உளவாளிகள் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ஊழியர் ஒருவரும் உளவு தகவல்களை விற்ற இரு நபர்களிடம் இருந்து ரகசிய ஆவணங்களை பெற்று வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறித்து இந்தியாவின் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சமும், செயலாளர் ஜெய்சங்கரும் சம்மன் அனுப்பினர்.  டெல்லி போலீசாரிடம் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய மெகமூது அக்தர் என்ற அந்த அதிகாரி, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தூதரகப்பணியில் சேர்ந்தார். அவர் பாகிஸ்தானின்  உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜென்ட் ஆவார். டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், தூதரக அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் அவரை உடனடியாக விடுவித்தனர். மேலும், அவர் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அக்தர் டெல்லியில் உள்ள சந்தினி சவுக்கில் இருப்பதற்கான ஆதார் அட்டை வைத்திருந்தார். அந்த அட்டையும் போலியானது என்பது தெரியவந்தது. பாகிஸ்தானுக்கு தகவல்களை விற்ற இருவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஒருவர் மவுலானா ரம்சான்கான். மற்றொருவர் சுபாஷ் ஜான்கிர். கான் மசூதியில் ஆசிரியராக உள்ளார். மற்றொரு நபரான ஜான்கிர் நாகவுரில் வியாபாரம் செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

அதிகாரி கைதுக்கு பாக். கண்டனம்
இந்திய பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக கூறி டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை போலீசார் கைது செய்ததை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது.,

பாகிஸ்தான் தூதரக அதிகாரியை கைது செய்ததற்கும், அவரை தரக்குறைவாக நடத்தியதற்கும், கண்டனத்தை பதிவு செய்கிறோம். பாகிஸ்தான் தூதரக உறவை மழுங்கச் செய்யும் இந்திய முயற்சிதான் இது. எங்கள் அதிகாரி தவறு செய்ததற்கான எந்த ஆதாரமும் தரப்படவில்லை. இது ஒரு பொய் குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகமது அக்தரை, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்