முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்புவின் படம் உட்பட 5 படங்களுக்கு வந்த சோதனை

புதன்கிழமை, 9 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : பிரதமர்  மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று  அறிவித்துள்ள  நிலையில் நாளை  வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இதையடுத்து  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது . ஏடிஎம் மையங்கள்  செயல்பட வில்லை.

இதனால் மக்கள் தங்கள் கையில் உள்ள சில்லறை பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நாளை  அச்சம் என்பது மடமையடா, ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள சென்னை 28 II, ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள மீன்குழம்பும் மண்பானையும், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய 5 படங்கள்  வெளியாகின்றன .  ஆனால்  மக்கள் கையில் உள்ள பணத்தை வைத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவார்களே தவிர படம் பார்க்க செலவு செய்ய நினைக்க கூட மாட்டார்கள் . இதனால் நாளை  வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை உள்ளது . சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஏற்கனவே தாமதமாக ரிலீஸாகும் நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்