முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன், வேல்முருகன் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

10–11–2016 அன்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி, தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படாது என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இந்த ஷேல் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும்.மேலும், மத்திய அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டகால எதிர்ப்பான காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனே காலம் தாழ்த்தாமல் அமைக்க முன்வர வேண்டும். எனவே, மத்திய அரசு தமிழகத்தில் விளை நிலங்களை பாதிக்கும் மீத்தேன், ஷேல் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர இனிமேல் முயற்சிக்க கூடாது என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக வாழ்வுரிமை கட்சி மனதார வரவேற்கிறது’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்