முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புபணம் பெருக யார் காரணம்?: திருமாவளவன் குற்றசாட்டுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, கருப்புபணம், கள்ளப்பணம் பெருக யார் காரணம் என்று திருமாவளவன் குற்றசாட்டுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி மக்களை அலையவிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வாசலை திறந்து விட்டதாகவும், ராகுல் பிரதமர் ஆவார் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலின் போது நால்வர் கூட்டணியை திருமாவளவன் தான் உருவாக்கினார். அப்போது ‘ எந்த காரணத்தைக் கொண்டும் எப்போதும் காங்கிரசோடு கூட்டணி கிடையாது’ என்று அறிவித்தார்.அவ்வளவு மோசமாக கருதப்பட்ட காங்கிரஸ் மீது இந்த 5 மாதத்தில் திடீர் காதல் ஏன்?அப்போது கசந்த காங்கிரஸ் இப்போது இனிக்க காரணம் என்ன?நாட்டில் கருப்பு பணமும், கள்ளப்பணமும் பெருக காங்கிரஸ் தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சரிக்கட்டத் தான் இப்போது போராடுகிறோம்.இதை மனதில் வைத்து தான் ஊழல் மலிந்த காங்கிரசோடு கை கோர்க்க போவதில்லை என்று திருமாவளவன் அறிவித்தார். அப்படிப்பட்ட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது கேலிக்கூத்தானது. மக்களை இப்படி கேலிக்குரியவர்களாக கருதக் கூடாது.

இந்த திடீர் மாற்றதுக்கான காரணம் பற்றி அவரது கட்சிக்காரகளுக்கும், மக்களுக்கும் அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.உழைத்து சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது. கருப்பு பணத்தின் மதிப்பு அதிகம் என்பது மக்களுக்கு புரிந்து இருக்கிறது. சாதாரண மக்கள் மனதில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.தற்காலிக சிரமத்தை சந்திக்கும் மக்கள் நாட்டுக்காகவும், நிரந்தர மகிழ்ச்சிக்காகவும் வரிசையில் காத்து நிற்கிறார்கள்.இந்த நேரத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். சிரமம் தற்காலிகமானது தான். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கூறியிருந்தால் அது அவர்களது உண்மையான அக்கறையை காட்டும். ஆனால் கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கும், ஊழல் வாதிகளுக்கும் உதவுவதற்காக போராடு வதை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.ஒரு வாரத்தில் 5 லட்சம் கோடி கருப்பு பணம் வெளியே வந்துள்ளது. இன்னும் எத்தனை லட்சம் கோடி வரப்போகிறதோ? பொறுமையாக இருக்கும் மக்களை தூண்டிவிட முயற்சித்தால் அது உங்களுக்குத் தான் பாதிப்பாக முடியும்.2022 ல் அனைவருக்கும் வீடு, மின் இணைப்பு, கியாஸ் இணைப்பு என்ற லட்சியத்தோடு பணியாற்றும் மோடியின் திட்டத்துக்கு யாரும் முட்டுக்கட்டைபோட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்