முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணியில் பார்த்தீவ் பட்டேல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய விருத்திமான் சகாவுக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 246 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் வருகிற 26-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. மொகாலி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் இடம் பெற்றுள்ளார்.

விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் விருத்திமான் சகா காயம் அடைந்ததால் அவர் இடத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சகாவுக்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டது. காயம் மேலும் அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

31 வயதான பார்த்தீவ் பட்டேல் 8 ஆண்டுகளாக டெஸ்டில் விளையாடுகிறார். கடைசியாக 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு டெஸ்டில் ஆடினார். குஜராத்தை சேர்ந்த அவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாட இருக்கிறார். கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காம்பீருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

மொகாலி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரகானே, அஸ்வின், பார்த்தீவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, கருண்நாயர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்