முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

காத்மாண்ட், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேபாளத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என நேபாளம் ராஸ்டிரா வங்கி தெரிவித்துள்ளது. அந்நிய பரிமாற்ற மேலாண்மை சட்டத்தின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோட்டீஸ் கொடுத்த பின்னரே இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று நேபாளம் ராஸ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.மேலும், இந்திய அரசு தரப்பில் இருந்துதான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுவரை இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாதவையாக கருதப்படும் என கூறியுள்ளது.

இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கியின் கிழக்கு மண்டல தலைவர் ராமு பவ்டெல் கூறுகையில், இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இப்போது உள்ள ஒப்பந்தத்தின் படி நேபாள மக்கள் இந்திய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை ரூ25,000 வரை வைத்துக்கொள்ளலாம் என்பதே சட்டம். அதில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் அடங்கும்.தற்போது இந்த ரூபாய் நோட்டுக்களின் விதியோகம் கேள்விக் குறியாக இருக்கும்போது, எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து புதிய ஒப்பந்தத்தை இந்தியாவும் நேபாளமும் மேற்கொண்ட பின்னரே புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்