முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில சுவாரஸ்யமான தகவல்கள்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வியக்க வைக்கும் யானைகள்
இவை 13 அடி வரை உயரம் வளரும் மற்றும் 70 வயது வரை வாழும். மிக மோசமான கண் பார்வை கொண்ட விலங்கு இனம். ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் யானைகள் அழக்கூட செய்யும். அதன் குட்டி அதோட அம்மாவிடம் குறை கூறினால் மனிதர்களை போலவே அதோட குடும்பமே உருளும் ஒலி எழுப்பி குட்டியை தொட்டு சீராட்டும். பாவம் இந்த இனம். சமீப காலமாக நாம் நிறைய யானைகளை இழந்து விட்டோம். இனியாவது வரும் காலங்களில் நாம் இழந்து வரும் யானைகளை பாதுகாப்போம்!

நாசா தயாரித்த சுவையான உணவு

 விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளி பயணத்துக்காக நாசா விஞ்ஞானிகள் காலை உணவுக்காக நான்கு (வாழைப்பழம், ஆரஞ்சு, இஞ்சி வெண்ணிலா, பார்பிகியூ மற்றும் பருப்பு) சுவையான பார்களை தயாரித்துள்ளது. இதில் சுமார் 800 கலோரிகள் மட்டுமே உள்ளன.

 

சார்டின்ஸ் மீன்கள்
சான்டியாகோ கடல் பகுதியில் தண்ணீரில் குறைந்த பிராண வாயு காணப்பட்டதன் காரணமாக சார்டின்ஸ் மீன்கள் சான் டியாகோ கடற்கரையில் கூடினர். இதில் பல லட்சம் மீன்கள் கூட்டமாக இருப்பதை கண்கொள்ளாக் காட்சியாக காணமுடிகிறது.

மாவுசத்தை குறைப்பதனால் ஏற்படும் மாற்றங்கள்

 கெட்ட கொழுப்பை குறைப்பீர்கள்.  குறைவாக பசிக்கும், தொப்பை பகுதி குறையும், நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும், உங்கள் தசைகள் வலுவாக ஆரம்பிக்கும்.  நீங்கள் மிகவும் சக்தி உள்ளவராக உணர்வீர்கள்.

 

 

மாபெரும் கொட்டாரம்
வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்துக்கு 30 ஆண்டுகள் பிறகு செர்னோபில் அணு உலைக்கு  மாபெரும் கொட்டாரம் அமைக்கப்பட்டு இறுதியாக சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அமைக்க சுமார் 1200 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பப்பாளி பழத்தின் சுவையான 5 நன்மைகள்

கொழுப்பை குறைத்து, எடை குறைய உதவுகிறது. 2.உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கவிக்கிறது. 3.நீரிழிவு நோய்க்கு நல்லது, இனிப்பாக இருந்தாலும் மிக குறைந்த அளவே இதில் சர்க்கரை இருக்கின்றது. 4. தோல் வெண்மையாகும். 5. புற்றுநோய் மற்றும் மன அழுத்தத்தை தடுக்கிறது.

விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

கூகிள் நிறுவனம் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாளை கொண்டாடும்  விதமாக ஒரு டூடுலை (புகைப்படம்) போட்டு அசத்தி இருக்கின்றது. இவர் தாவரங்கள் வளர்ச்சியை ஒரு கருவியை (crescograph) கொண்டு அளவிட கண்டுபிடித்தார்.

கிருஷ்ணரின் துவாரகை

இப்பகுதி இப்பொழுது நீருக்கு அடியில் 40m ஆழத்தில் குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதிக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் இருந்த அரண்மனைகளில் உள்ள பல பகுதிகள் பளிங்கு கற்கள் மற்றும் வெள்ளி பொருட்களால் அலங்கரிக்க பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நகரமே மிகவும் அழகு நிறைந்த மற்றும் பசுமையான சூழலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்திய கடல் ஆய்வுகளின் படி இந்த நகரம் உண்மையிலே இருந்ததாகவும் அதில் கண்டு எடுக்கபட்ட பொருட்கள் சுமார் கி.மு 17,000 வருடங்களுக்கு முன் மக்கள் பயன் படுத்தி இருக்கலாம் என கண்டறியப்பட்டு இருக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்