முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘108’ ஆம்புலன்ஸ் சேவை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் சிக்கியவர்களுக்கு Golden Hour என்பது ஒரு முக்கியமான தருணமாகும். இத்தருணத்திற்குள் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உயிர்களை காப்பாற்றுவதில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிகப் பெரிய பொறுப்பை வகிக்கிறது.

அமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டில் 855 ஆம்புலன்ஸ் இந்த சேவையில் உள்ளது. அவற்றில் பச்சிளம் குழந்தைகளுக்கான 65 ஆம்புலன்ஸ்களும், மழை வெள்ளத்திலும் செல்லக்கூடிய 78 ஆம்புலன்ஸ்க ளும், மற்றும் சின்ன சின்ன தெருக்களிலும் செல்லும் வகையில் 41 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் சேவையில் உள்ளன. இந்த சேவையை பயன்படுத்தும் விதமாக 24 மணி நேரமும் தெலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள ஏதுவாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையம் ஒரு முதுகெலும்பு போன்று செயல்படுகிறது. இந்த சேவை மழை மற்றும் பேரிடர் காலங்களில் எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை அளிக்கிறது. இந்த மையத்துக்கு நேற்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்று திடீர் ஆய்வு செய்தார். இவ்வாய்வின்பொழுது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர். தாரேஸ் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்