முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருவில் நிலநடுக்கம்: வீடுகள் சேதம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 லம்பா  - பெருவின் தென் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.
லம்பா நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பெரு நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 உயிரிழப்புகள்  இல்லை : இந்த நிலநடுக்கம் குறித்து பெருவின் தேசிய சிவில் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தினால் சில வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளது. 30 நொடிகள்வரை நிலநடுக்கத்தின் அதிர்வு நீடித்தது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை" என பதிவிட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்துக்கு சுமார் 200 நிலநடுக்கங்கள்வரை ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை. முன்னதாக பெருவில் 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்