முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி டி.வி.நிகழ்ச்சி வரவேற்பை நிர்ணயிக்கும் டி.ஆர்.பி அரசியலை நடத்துகிறார், ராகுல் காந்தி பாய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  -  பிரதமர்மோடி டி.வி நிகழ்ச்சி  வரவேற்பை நிர்ணயிக்கும் டி.ஆர்.பி ரேட்டிங் அரசியலை நடத்துகிறார் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி கூட்டம் நேற்று தலைநகர் டெல்லியில்  நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை.

டி.வி ரேட்டிங் அரசியல்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  பின்னர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், பா.ஜ.தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணி அரசின் பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, காஷ்மீர் கொள்கைகள் ஆகியவை அரசு கொள்கை முடிவுகள் டிவி நிகழ்ச்சியின் வரவேற்பை நிர்ணயிக்கும் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒத்ததாகவே உள்ளது என்றார்.

முன்னதாக, அவர் கட்சி எம்.பிக்களிடம் அவர் பேசுகையில், தகுதியற்ற பிரதமர் நடவடிக்கையால்  நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. கறுப்பு பணம் தங்கம், ரியல் எஸ்டேட், அயல் நாடுகளில் பதுக்கல் என உள்ளது. அயல் நாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.என்றார்.
பாதகங்கள்

பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவால் ஏற்பட்ட பாதகங்கள் குறித்து முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்