முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அ.தி.மு.கவின் கோரிக்கை நியாயமானது: பொன்.ராதாகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

புதுச்சேரி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற  அ.தி.மு.கவின் கோரிக்கை நியாயமானதே என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு கருத்தரங்கில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை தொடர்பாக, அதற்கான குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும் என தெரிவித்தார். மேலும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்