முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு திறப்பு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

திருச்சி : திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு முழுமையான தீர்வுகான ஒருகிணைந்த புகார் கண்காணிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நேற்று(20,12,2016) திறந்துவைத்தார்கள், நிகழ்ச்சியில் நகரப் மாநகரப் பொறியாளர் நாகேஸ், செயற் பொறியாளர்கள் எஸ். செல்வம் , அமுதவள்ளி கலந்துகொண்டார்கள்.

 

மெசர்ஸ்.ஒய்.டி.ஆர்.டெக்னாலஜி நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பு, பொதுமக்களால் பெறப்படும் புகார்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும். இந்த அமைப்பில், புகார்களை பதிவு செய்தல், புகார்களுக்கு ஒப்புதல் வழங்குதல், முறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்குதல், உயர் அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல், ஆய்வு செய்தல், அறிக்கை செய்தல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த ஒருங்கிணைந்த புகார்கள் கண்காணிக்கும் அமைப்பில், பொதுமக்கள் இணையம், முகநூல், வாட்ஸ்அப் செயலி, ட்விட்டர் செயலி மற்றும் கால்சென்ட்டர் மூலமாக, தொழில்நுட்பம் அறிந்தவராயினும், அறியாதவராக இருப்பினும், கல்வித்திறன் குறைவாக இருந்தாலும், எளிதில் புகார்கள் சமர்ப்பிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு ஒரு அலுவலகத்துடன் வெவ்வேறு ரூபங்களில் தொடர்பு இருக்கும். உதாரணமாக, பொதுமக்களுக்கு குடிநீர் வரவில்i, குப்பைகள் அள்ளப்படவில்லை, மழைநீர் தேங்கியுள்ளது, பாதாளச் சாக்கடை அடைப்பு உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், ஒப்பந்தக்காரர்களுக்கு, தாங்கள் மேற்கொண்ட பணிக்கு பட்டியலினைப் பெறுவதிலும், மற்றொருவருக்கு தெருநாய்கள் மூலம் தொல்லை என்ற பிரச்சினை இருக்கும். இவை அனைத்திற்கும், இந்த புகார் கண்காணிக்கும் அமைப்பில் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

புகார்கள் பெறப்பட்டவுடன் உரிய ஒப்புதல் குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்வார்கள். புகார்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படாவிடின், உரிய தீர்வு காண்பதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், இந்த அமைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்