எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி, பேரூராட்சி, வார்டுகளில் 100 சதவீதம் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. வர்தா புயலால் முழுமையாக மற்றும் பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுகளும், கால்நடை இழப்பீட்டு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் வட்டத்தில் வர்தா புயலால் முழுமையாக மற்றும் பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண நிதியுதவியாக 162 பயனாளிகளுக்கு ரூ. 6,64,200 மதிப்பிலான நிவாரண நிதியுதவிகளை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.ஆர்.துரைக்கன்னு அவர்கள் வழங்கினார். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபானி, மதுராந்தகம் சார் ஆட்சியர் கில்லிசந்திரசேகர்., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாசுபாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) என்.விஸ்வநாதன் மற்றும் வட்டாட்சியர் கற்பகம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


