விவசாயியின் காதுகளை கடித்து குதறிய 3 பேர் மீது வழக்கு:

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      மதுரை

திருமங்கலம் : திருமங்கலம் அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் லட்சுமணன்(55).விவசாயியான இவருக்கும் இவரது உறவினரான அய்யல்ராஜ் என்பவருக்கும் சொத்துத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று செங்கப்படை முனீஸ்வரன் கோவில் அருகே நடந்து கொண்டு கொண்டிருந்த லட்சுமணன் மற்றும் அவரது மனைவி ஞானசெல்வியை, அய்யல்ராஜின் மனைவி ஜோதிமணி,மகன்கள் ராஜ்குமார்,ராஜேஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.இதில் லட்சுமணனின் காதுகளை அவர்கள் 3 பேரும் கடித்துக் குதறியுள்ளனர்.

இது தொடர்பாக திருமங்கலம் அரசு மருத்து அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: