முகப்பு

மதுரை

tmm news

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் உறுதி

23.Aug 2017

திருமங்கலம்.- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட மாநில அம்மா பேரவைச் செயலாளர்,வருவாய்துறை அமைச்சர் ...

mdu news

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.02 கோடி கடன்கள் - நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ வழங்கினார்

23.Aug 2017

மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...

mdu news

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை ஆணையாளர் .அனீஷ் சேகர், ஆய்வு

22.Aug 2017

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  ஆய்வு ...

mdu news

7வது உலக குள்ளர்களுக்கான நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற கணேஷ் மனோஜ்க்கு, கலெக்டர் பாராட்டு

21.Aug 2017

  மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,  ...

alaga

ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

20.Aug 2017

அலங்காநல்லூர்.- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ட்ரீம் பாய்ஸ் நற்பணி ...

mdu news

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்

18.Aug 2017

மதுரை, -           மதுரை மேற்குசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ...

tmm news

கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திட 24 மணிநேரமும் கண்காணிப்பு திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் தகவல்

17.Aug 2017

திருமங்கலம்.- தொடர்மழை காரணமாக திருமங்கலம் தாலுகாவிலுள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திடும் வகையில் 24மணி நேரமும் தீவிர ...

mdu univercity

காமராசர் பல்கலை.யில் எம்.எஸ்.சி. உயிரிதொழில்நுட்பவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழா துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமையில் நடந்தது

17.Aug 2017

மதுரை, - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.உயிரிதொழில்நுட்பவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விழா துணை வேந்தர் ...

mdu news

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிபொருள்களின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

17.Aug 2017

 மதுரை.- மதுரை பாண்டியன் ஹோட்டலில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிபொருள்களின் சிக்கனம் ...

alaga

மதுரை மாவட்ட பகுதிகளில் வழிப்பறி,வாகன திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

16.Aug 2017

 அலங்காநல்லூர்.-   தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ்குமார்யாதவ்,  காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார், ஆகியோரது ...

tmm news

உ.பி முதல்வர் யோகிஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும்: முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் வலியுறுத்தல்:

16.Aug 2017

திருமங்கலம்.- அரியலூர் ரயில் விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அன்றைய மத்திய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்யதது ...

mdu 5

71 வது சுதந்திர தின விழாவில் - மதுரை ஆணையாளர் அனீஷ் சேகர், தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

15.Aug 2017

  மதுரை -மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 71வது சுதந்திர தின விழாவில் ஆணையாளர் ஃ தனி அலுவலர் மரு.அனீஷ் சேகர், தேசியக் ...

mdu news

மதுரை கலெக்டர் வீர ராகவ ராவ் தலைமையில் திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை வார விழா

14.Aug 2017

மதுரை.- மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊரக ...

tmm news

தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக துணிவுடன் போராடிய திருமங்கலம் ஸ்ரீ சுபாஷ்பாபு வாலிபர் சங்கம்

14.Aug 2017

திருமங்கலம்.- 1938ம் ஆண்டில் இந்திய தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்கு முறைகளை எதிர்த்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் ...

alagar

ஆடி மாத கழிவு நாளையட்டி பக்தர்கள் அழகர்கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம்.

13.Aug 2017

 அழகர்கோவில், - பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி மாத ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து தினமும் ப க்தர்கள் ...

tmm news

டி.கல்லுப்பட்டியில் கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

13.Aug 2017

திருமங்கலம்.- மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினம் ...

mdu news

சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகள் இலுப்பூர் பக்தர்கள் பாதையாத்திரையாக எடுத்து வந்தனர்

11.Aug 2017

 அழகர்கோவில் - புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபையின் சார்பாக 44ம் ஆண்டு 108 மயில் காவடிகள் முருக ...

tmm news

திருமங்கலம் அருகே உயிரிழக்கும் மான்களின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரிப்பு: மான்கள் சரணாலயம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

11.Aug 2017

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கியும்,வனவிலங்குகள் ...

mdu news

மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும்: தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

9.Aug 2017

திருமங்கலம்.-திருமங்கலம் பகுதி மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்றிட வேண்டும் என திருமங்கலம் ...

mdu news

திருமங்கலம் தாலுகாவில் மழைநீரால் நிரம்பி மறுகால் பாய்ந்திடும் ஊரணிகள்: வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரம்:

8.Aug 2017

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த   பலத்த மழை பெய்த காரணமாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானிகள் சாதனை

உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

குழந்தைக்கு எமன்

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.