முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,, தலைமையில் நேற்று(26.12.2016) நடைபெற்றது.

 

முதியோர் உதவி தொகை

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 261 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தாராஜ், ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 2015-2016 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிவராம் என்ற மாணவனுக்கு ரூ.4,000- மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழையும், வருவாய் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் இந்திராகாந்தி விதவை உதவித்தொகைக்கான உத்தரவுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.19,000 மதிப்பில் நவீன செயற்கை கால்களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பாக கரூh வட்டத்தைச் சேர்ந்த 45 பயனாளிகளுக்கும், குளித்தலை வட்டத்தைச் சேர்ந்த 13 பயனாளிகளுக்கும் புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் 76 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்