யானைக்கவுனி பகுதியில் தனியார் நிறுவனத்தில் கேபிள்களை திருடிய நபர் கைது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சென்னை

சென்னை, யானைகவுனியை சேர்ந்த ராஷிக் அலி, வ/42, த/பெ.ஷக்காரியா என்பவர் நியூ சோமசுந்தரம் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில், யானைக்கவுனியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள கேபிள்களை வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி கேபிள்கள் திருடுபோயிருப்பதை கண்டு ராஷிக் அலி அது தொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. யானைகவுனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டதில், அதில் ஓரு நபர் கேபிள்களை திருடி ஆட்டோவில் எடுத்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து மேற்படி கேபிள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில்குமார், வ/28, த/பெ.பாலு, எண்.26, சத்தியவாணிமூர்த்தி நகர், புளியந்தோப்பு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட செந்தில் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: