முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி மதத்தை பயன்படுத்தி ஓட்டுக் கேட்பது சட்ட விரோதம் : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனம், சமூகத்தின் பெயரால் வாக்குகள் கோருவது  சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பளித்துள்ளது. தேர்தலின்போது சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பது தொடர்பாக கடந்த 1995-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு  பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு மனுவானது  நேற்று சுப்ரீம் கோர்ட்டு  தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், எம்.பி.லோகூர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் உள்ளிட்ட 4 நீதிபதிகள் சாதி, மத, மொழி, இனம், சமூக அடிப்படையில் வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமே என்றனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் தேர்தல் ஊழல் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் மதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பது முறைகேடு என்றனர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மதம் என்ற வார்த்தை வேட்பாளருடைய மதத்தை சுட்டிக் காட்டுவதே ஆகும் என்றனர். 7 பேர் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனத்தின் பெயரில் வாக்குகள் கோருவதும் ஊழலே என தெரிவித்ததால். இந்த வழக்கில் பெருமான்மை நீதிபதிகள் சொன்னது தீர்ப்பானது.

1995 தீர்ப்பு என்ன?
1995-ல் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "இந்துத்துவம்/இந்து மதம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறையாகும்; ஒரு வேட்பாளர் அதை சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது' என்று தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்