ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி ஜெட்லியுடன் ஆலோசனை நடந்ததா?- பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

 மும்பை  - பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னதாக, நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டதா என்று கோரிய மனுவுக்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.  “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  ரிசர்வ் வங்கிக்கு ஒரு மனு அனுப்பப் பட்டது. அதில், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதற்கு முன்பாக, இதுகுறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரிடம் கருத்து கேட்கப் பட்டதா” என கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், “இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆர்டிஐ சட்டத்தில் வழி இல்லை. இதற்கு ஆர்டிஐ சட்டத்தின் 2(எப்)-வது பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் தகவல் ஆணையர் ஷைலேஷ் காந்தி கூறும்போது, “அரசின் முக்கியமான நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்று கூற முடி யாது. ஒரு நடவடிக்கை தொடர் பான ஆவணங்கள், இ-மெயில் கள், கருத்துகள், ஆலோசனை, சுற்றறிக்கைகள், உத்தரவுகள் என எத்தகைய தகவலாக இருந்தாலும் அதைப் பொதுமக்கள் கேட்கும்போது தர வேண்டும்” என்றார்.

இதுபோன்ற மனு பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கும் அனுப் பப்பட்டுள்ளது. ஆனால் 30 நாட்கள் ஆகியும் இதுவரை பதில் இல்லை. மேலும் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக ஆலோசனை நடத் தப்பட்ட அதிகாரியின் பெயர் மற்றும் பதவி ஆகிய விவரங் களை தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருந்தார். இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், “இந்த நடவடிக்கை மிகவும் உணர்வுபூர்வமானது ஆகும். எனவே, இதுபோன்ற மனுக்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை என ஆர்டிஐ சட்டத்தின் 8(1)(ஏ)-வது பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட பல் வேறு மனுக்களுக்கும் ரிசர்வ் வங்கி பதில் அளிக்கவில்லை.


இதை ஷேர் செய்திடுங்கள்: