முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      சென்னை

தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.

 

புத்தாண்டு தினமான நேற்று முன் தீனம் அதிகாலையில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 

தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலிலும் விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். புத்தாண்டு தினமான நேற்றுமுன் தீனம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக இரவு 11 மணிவரை 20 மணி நேரம் திறந்திருந்தது. 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமான நாட்களில் 9 மணி அளவில் நடை திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் புத்தாண்டு தரிசனத்துக்காக நேற்று முன்தினம் இரவில் இருந்தே மக்கள் தேவஸ்தானம் முன்பு குவியத் தொடங்கினர்.

 

நேற்று அதிகாலையில் சாமியை தரிசனம் செய் வதற்காக முந்தைய நாள் இரவு 9 மணிக்கே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இப்படி இரவு முழுவதும் 6 மணி நேரம் காத்திருந்தனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ. அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர். மாம்பலம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.போலீஸ கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன் ஆகியோரது மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக 5 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெண் போலீசாரும் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நூறு நூறு பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.200 இடங்களில் விழிப் புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பிக்பாக் கெட், செயின் பறிப்பு திருடர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்