சிறந்த கல்வி எதையும் சாதிக்கும்: ஒபாமாவின் மனைவி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      உலகம்
mich obama 2017 1 8

வாஷிங்டன் : அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உங்களை கவுரப்படுத்தியிருக்கிறேன் என நம்புவதாக மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையில் தனது கடைசி உரையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மேலும் அவர் பேசும்போது "சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும் அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியமாயிற்று" என்றார்.

நன்றி தெரிவித்து பேச்சு :

வெள்ளை மாளிகையில்  அமெரிக்காவின் முதல் பெண்மணியாக தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து மிச்செல் பேசியதாவது,


 "அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தது எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். அந்தவகையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து உங்களை கவுரவப்படுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

நானும் என் கணவரும் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை அனுபவித்திருக்கிறோம். ஆனால், கல்வி எங்களை காப்பாற்றியது. சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும். அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியப்பட்டது.

இளைஞர்கள் எதற்கும் பயம் கொள்ளக் கூடாது. உங்களால் முடியும் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும். எதற்கும் பயம் கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள், தீர்க்கமாய் இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், அதிகாரத்துடன் இருங்கள், தரமான கல்வியுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் கல்வியை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்லுங்கள். நம்பிக்கையுடன் எடுத்துக்காட்டாய் வாழுங்கள்" என்று பேசினார்.

ஆதர்வாளர்கள்  கண்ணீர் :

மிச்செல் பேசுகையில் அவரை சுற்றியிருந்த ஆதர்வாளர்கள் பலர் கண்ணீருடன் அவரை உற்சாகப்படுத்தினர்.  அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த பாரக் ஒபாமாவின் பதவிக்காலம், இம்மாதத்தில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 20ஆம் நாள் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

117-ல் மரணம்

1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த இத்தாலியைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117.  21-வது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.