முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் ஆடவுள்ள கிரிக்கெட் தொடர் எளிதாக இருக்காது - ஆஸி. கேப்டன் ஸ்மித் அச்சம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

சிட்னி(ஆஸ்திரேலியா) : வலிமை மிக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த முடிவுகளை பார்க்கும் போது இந்திய அணியுடன் நாங்கள் ஆடவுள்ள கிரிக்கெட் தொடர் எளிதாக இருக்காது என்பதை புரிந்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் ஆட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் வருகிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது. இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது ஒரு நாள் போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டனாக விராட் கோலி  நியமிக்கப்பட்டுள்ளார். டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத்தொடர்ந்து  விராட் கோலி அணி பொறுப்பை ஏற்றுள்ளார்.

இங்கிலாந்து போட்டிகளுக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஆடவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவுடன் ஆடும் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிட்னியில் கூறியதாவது,

நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமாகவே இருக்கும், கடினமாக இருக்காது என்ற மாயையில் நாங்கள் இல்லை. அங்கு சவாலாகத் திகழ நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். மிகப்பெரிய சவாலாகும் தொடர் அது என்பதோடு, எங்களுக்கு கற்றுக் கொள்வதற்கும் நிறைய உள்ளன.

எங்களில் சிலர் ஏற்கெனவே இந்தியாவில் ஆடியுள்ளோம், இந்திய அணியை எதிர்த்து அவர்கள் மண்ணில் ஆடுவது மிக மிகக் கடினமானது. அது முற்றிலும் வேறு ஒரு இடமாகும். ஆஸ்திரேலியா ஆடு களங்களில்  ஆடுவதும் அங்கு ஆடுவதும் முற்றிலும் வேறுபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.. ஆஸ்திரேலிய அணியின்

பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறும்போது, ”நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவது முக்கியம். இந்திய அணியின் ஆடுகளங்களை பொறுத்து, சூழலைப்பொறுத்து ஆஸ்திரேலிய அணி யின் வீரர்கள் தேர்வு அமையும்.. இந்திய அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த ஒவ்வொருவரும் செய்யும் பங்களிப்பை யோசித்து அணியைத்  தேர்வு செய்வோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்