உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வு திருவிழா ஸ்ரீ.பாலசுப்பிரமணியசுவாமி சன்னதி வளாகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவின் தொடக்கமாக மகளிருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் மகளிர்சுய உதவிக் குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் நாட்டின் அறியவகை நாணயங்களின் கண்காட்சி பேரூராட்சி வளாகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து பிளாஸ்டிக் போன்ற மக்கா கழிவுகளைக் கொண்டு கண்கவரும் கலைப்பொருட்கள் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கும் குப்பைகளைக் கொண்டு வீட்டுத் தோட்டம் ,மூலிகைச்செடி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்டவைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேப் போல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களின் அறியவகைப் படைப்புக்களை வைத்து அதற்கான விளக்கங்களை அளித்தனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான தெருக்கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை,பரத நாட்டியம் ,கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையிலான பேரூராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: