முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர்களாக நியமிக்கப்பட்ட சுரேஷ் கல்மாடி - அபய்சிங் நியமனம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை : இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபய்சிங் நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டது.

முறைகேடு குற்றச்சாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) கவுரவ ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ்கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவு மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் ஏற்கனவே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்களாக இருந்து, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்தவர்கள். குறிப்பாக சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டு நிதி முறைகேட்டில் கைது செய்யப்பட்டு 10 மாத சிறைவாசத்தை அனுபவித்தவர்.

ஒலிம்பிக் சங்கத்துக்கு நோட்டீஸ்

இதையடுத்து அவர்களது நியமனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் கேட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவர்கள் இருவரையும் உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது விலகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடனான அனைத்து உறவும் துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

நியமனம் ரத்து

மேலும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து இப்போது இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்