அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் குறித்த உண்மைகள் பல ரஷ்யா புலனாய்வு துறையிடம் உள்ளதாக தகவல்

திங்கட் கிழமை, 20 பெப்ரவரி 2017      உலகம்
donald trump 2016 11 9

மாஸ்கோ  - அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் குறித்து ரஷ்யா புலனாய்வு துறையிடம் பல தகவல்கள் ஆதாரத்துடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர வருகிற 20 ந்தேதி பதவி ஏற்க உள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

புது சர்ச்சை
இந்நிலையில் தற்போது விபச்சார அழகிகளுடான தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். புஷ்பீடி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2013 ஆண்டு ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலில் அமெரிக்க அதிபர்  பராக் ஒபாமா தன் மனைவியுடன் வந்து தங்கினார்.


டிரம்ப் மறுப்பு
ஒபாமாவை எப்போதும் வெறுக்கும் டொனால்டு டிரம்ப் ஒரு கீழ்தரமான செயலில் அப்போது ஈடுப்பட்டுள்ளார். அதாவது, விபச்சார அழகிகளை அழைத்து வந்து ஒபாமா தங்கியிருந்த அறையில் சிறுநீர் கழிக்க வைத்தார் என கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா புலனாய்வு துறையினரிடம் இன்னும் பல உண்மைகள் ஆதாரத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுத்து டொனால்டு டிரம்ப் டுவிட் செய்து உள்ளார்.

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேனின் மகத்துவம்

நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.

இதயம் அறிவோம்

அரை கிலோ கிராமுக்கு எடை குறைவான உறுப்புதான் இதயம். இதன் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காததனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவே, இதற்கு பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாப்பதால்தான்.

தெரியாத பகுதி

லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது.

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

வழிகாட்டும் வரைபடம்

உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில்தான் அதிக பார்வையற்றோர் இருக்கிறார்களாம். இந்நிலையில் உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

சூரிய குளியல்

சூரிய குளியலால் உடலுக்கு வைட்டமின் 'டி' அதிகம் கிடைப்பதால், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறதாம்.  வைட்டமின் 'டி' குறைபாடினால் வளர்சிதை நோய் உருவாகிறது. இத்தகைய வளர்சிதை நோயினால்தான் நீரிழிவு, இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

சாப்பிடும் போது...

சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

விரைவில் பேச

குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை உடனடியாக பேச வைக்க, குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டுமாம். இதன்மூலம், குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும். நல்ல சங்கீதம் மற்றும் பாடல்களை கேட்க செய்வதன் மூலமும் அவர்கள் விரைவில் பேச கற்று கொள்கிறார்களாம்.

நன்மைகள் பல

பெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.

'மனித மூளை' ஆச்சரியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.  சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.