முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் சேவல் சண்டை தொடர்பாக உடனடியாக உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டைக்கு ஐகோர்ட் விதித்துள்ள தடையை நடைமுறைப்படுத்த தவறிய மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துள்ளது.

சேவல் சண்டைக்கு தடை
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப்போல் ஆந்திர மாநிலத்தில் ‘சங்கராந்தி’ பண்டிகையின்போது நடத்தப்படும் சேவல் சண்டை போட்டிக்கு ஆந்திர மாநில ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த தடையையும் மீறி ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் சேவல் சண்டைகள் நடத்தப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பணம் வைத்து ஆடும் சூதாட்டமாகவும் நடைபெற்று வரும் இந்த சேவல் சண்டைகள் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஒழுங்காக நடைமுறைப்படுத்துமாறு ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கவுரி மால்லேக்கி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இம்மனுவின் மீது நேற்று விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹார், டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு, சேவல் சண்டை தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்