முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேடந்தாங்கல் ஊராட்சியில் சித்தாதூர் கிராமகுளம் ரூ.6 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்படுவதை மாவட்ட கலெக்டர் இரா.கஜலட்சுமி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

வேடந்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சித்தாதூர் கிராம குளம் ரூ.6 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர்இரா.கஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நீர்வரத்து, உபரிநீர் செல்வதற்கான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார். குளம் ஆழப்படுத்தப்பட்டதனால் மழைநீர் குளத்தில் தேக்கியுள்ளதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் கிராமத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளை எடுத்துரைத்தார். குளம் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என பதிவேட்டை ஆய்வு செய்தார். குளம் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். மேலும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் கேட்டறிந்தார். பணியாளர்களின் அவசர தேவைக்காக முதலுதவி பெட்டி உள்ளதையும், அவசர காலத்தில் அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ பொருட்களையும் பார்வையிட்டார். அங்குள்ள உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளைப்புத்தூர் ஊராட்சியிலுள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு விநியோகித்த பொங்கல் பரிசு தொகுப்பினை பார்வையிட்டார். பொங்கல் பரிசு பொருட்களுக்கான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட அனைத்தும் சரியான எடையளவில் வழங்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார். விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் பொருட்களின் விவரம், தற்போதைய இருப்பு, மின்னனு இயந்திரம் மூலம் விநியோகம் செய்ய இயந்திரம் சரியான முறையில் பயன்படுத்தபடுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கு மரங்கள் வளர்க்கப்படுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மேலும், புதிய முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேக்குமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். பின்னர், புதிய முறையில் மரம் வளர்க்கப்படுவதால் பராமரிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது எனவும், மரங்கன்றுகள் நன்றாக வளர்க்கின்றன எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், கன்றுகளுக்கு தண்ணீர் தேவை குறத்து கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் தண்ணீர் எடுக்கப்படும் கிணற்றையும் பார்வையிட்டு கிணற்றில் நீர் இருப்பதை பார்வையிட்டு அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

 

மகளிர் பால் உற்பத்தியாளர் சேவை தொழில் குழுவால் ரூ.48,000 மதிப்பீட்டில் இயங்கும் புதுவாழ்வு திட்ட ஊக்க நிதியிலிருந்து கட்டப்பட்ட பால் சேகரிக்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மகளிர் குழுவினரிடம் தினந்தோறும் சேகரிக்கும் பால் எங்கு அனுப்பப்படுகிறது பால் லிட்டருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கிறது என்பதையும் பாலின் தரத்தை எவ்வாறு சோதனை செய்கிறார்கள் என்பதை கேட்டறிந்து சராசரியாக 1 லிட்டருக்கு கொடுக்கப்படும் விலை குறித்து கேட்டறிந்தார். மேலும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் இயங்கி வரும் அரசு பொது சேவை மையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பொது சேவை மையம் மூலம் வருமான சான்று, சாதிசான்று, இருப்பிட சான்று, கணவனரால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் மற்றும் வீட்டுவரி, தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை கேட்டறிந்தார். பொது சேவை பணியாளர்கள் கிராம மக்களின் தேவையறிந்து அவர்களது சிரமங்களை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்