முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதியில் படகு கவிழ்ந்த விபத்து 23 பேர் பலி: 20 சடலங்கள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் மாநிலத்தில் படகு ஒன்று கங்கை நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர்.

பீகார்  மாநிலம் பாட்னாவில்  மகர சங்கராந்தி  விழாவையொட்டி நடைபெற்ற காற்றாடி விடும் திருவிழாவை கண்டு களித்துவிட்டு  40 பேருடன் திரும்பிக்கொண்டிருந்த படகு ஒன்று எதிர்பாராத விதமாக கங்கை நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு :

படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதே விபத்து ஏற்பட காரணம் என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பீகார்  அரசு அறிவித்துள்ளது.

படகு விபத்தைதொடர்ந்து மகர சங்கராந்தி  விழாவின் ஒரு பகுதியாக பீகாரில்  நடைபெற இருந்த முக்கிய நிகழ்ச்சியை, ஆளும் ஜனதா தள கட்சி ரத்து செய்துள்ளது. இதனிடையே சரியான முன்னேற்பாடுகள் செய்யாததே விபத்து ஏற்பட காரணம் என்றும் இச்சம்பவத்திற்கு பீகார் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்