முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அரசு பகுதிகள் மீது தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் : 30-க்கும் மேற்பட்டோர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: சிரியாவில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு அரசுப் படைகளும் பதிலடி கொடுத்ததால், இம்மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடந்த மாதம் இறுதியில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கஜகஸ்தான் தலைநகர் ஆஸ்டானா -வில் அமைதி பேச்சவார்த்தைக்கு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டனர். அதே சமயம், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரியாவில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகர் மீது, நேற்று திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், அப்பாவி பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக சிரியா அரசுப் படைகளும் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த மோதலில், 12 அரசுப் படை வீரர்களும், 20 ஐ.எஸ். தீவிரவாதிகளும் உயிரிழந்ததாக சிரியா நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்