முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் கூட்டணிக்கு அகிலேஷ் தலைமை ஏற்க உள்ளார்.

சமாஜ்வாடியில் பிளவு
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கும், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டது. இதனால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக பிளவுபட்டது.

தேர்தல் கமிஷன் உத்தரவு
இதையடுத்து சமாஜ்வாடி கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை பெறுவதற்காக முலாயம், அகிலேஷ் இரு தரப்பினரும் தேர்தல் கமி‌ஷனை அணுகினார்கள். தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவுக்கு கொடுத்துள்ளது. இதனால் அகிலேஷ் யாதவும், சமாஜ்வாடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தக் கட்டமாக கட்சி அலுவலகங்களை கைப்பற்றியுள்ள அவர்கள் சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

லல்லு வாழ்த்து
சைக்கிள் சின்னத்தை கைப்பற்றிய அகிலேசுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களும், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அகிலேஷ் யாதவ் தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

4 கட்சிகள் கூட்டணி
பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தபோது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியை உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலிலும் களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.  எனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 கட்சி கூட்டணிக்கு அகிலேஷ் தலைமை ஏற்க உள்ளார்.

காங்கிரசுக்கு 85
காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. அகிலேசுக்காக விட்டுக் கொடுக்க தயார் என்று ஷீலா தீட்சித் ஏற்கனவே கூறியுள்ளார். மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் சமாஜ்வாடியை களம் இறக்க அகிலேஷ் திட்டமிட்டுள்ளார். 85 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு 25 இடங்கள் கொடுக்க அகிலேஷ் சம்மதித்துள்ளார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சில இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்