தமிழகம் காணக்கிடைக்காத தலைவர் எம்.ஜி.ஆர்-மதுசூதனன் புகழாரம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      சென்னை

நல்ல பல திட்டங்களால் ஏழை எளியோரின் வாழ்வில் வளம் பெற செய்த எம்ஜிஆர் தமிழகம் இனி காணக்கிடைக்காத தலைவர் என கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக அவை தலைவர் மதுசூதனன் பேசினார்.

 

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 100வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி்ல் ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் மு.க.சேகர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், தமிழக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அதிமுக அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

நிகழ்வில் பேசிய மதுசூதனன் தமிழகத்தில் எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்து ஆட்சி பொருப்பேற்ற பிறகு அவரை யாராலும் தோற்கடிக்க இயலாதவாறு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். திரைப்படங்களில் எப்படி நடித்தாரோ அப்படியே பொதுவாழ்வில் ஈகை குணம் கொண்டரவாக திகழ்ந்த எம்ஜிஆர் தமிழக முதல்வராக பொருப்பேற்ற காலகட்டத்தில் சிறப்பான நல்ல பல திட்டங்களால் ஏழை எளியோர்களின் இதய நாயகனாக திகழ்ந்து இன்றும் அவர் எல்லோர் மனதிலும் வாழ்ந்து வருகிறார் என்றார்.

 

நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கே.எம்.எஸ்.சிவகுமார், சதிஷ், ரமேஷ்குமார், ஷியாமளா தன்ராஜ், லோகாம்பாள் கருணாகரன், வாசு, ஓடை ராஜேந்திரன், தீபக் செந்தி்ல், சரவணன், பி.எம்.முரளி,சி.எம்.ஆர்.முரளி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: