தா.பழூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக்கண்காட்சி

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      அரியலூர்
pro ariyalur

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

 

புகைப்பட கண்காட்சி

இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்தி;ட்ட உதவிகள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக இ - பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள், மற்றும்; கால்நடைகளுக்கு குறைந்த விலையில் தீவனப்புல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சத்துணவுத் திட்டத்தின் மூலம் சத்துமாவு உருண்டை வழங்குதல், திருமண உதவி மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தி;ட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை 500-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

இப்புகைப்படக்கண்காட்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.நந்தகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் க.சரவணன் (செய்தி), ச.சிவக்குமார் (விளம்பரம்) பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: