ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்.ரின் 100வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்:அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திருவண்ணாமலை

ராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்;டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்ரின் 100வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நகர செயலாளர் என்.கே.மணி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் குமரன், நகர துணைசெயலாளர் செங்கதிர், நகர பொருளாளர் ராமமூர்த்தி, நகர அம்மா பேரவை செயலாளர் ஷாபுதீன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கே.பி.சந்தோஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.சித்ராசந்தோஷம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் பத்திரபதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்ராக கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆற்றிய பணிகளை பற்றியும் நலத்திட்டங்களையும் விளக்கி சிறப்புறையாற்றி பேசினார். எம்.ஜி.ஆர்ரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகரசெயலாளர் ஜி.மோகன், ஒன்றிய செயலாளர் எம்.சி.பூங்கவானம், முன்னாள் நகரசெயலாளர் ஜெ.பி.சேகர், முன்னாள் நகரமன்ற துணைதலைவர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.முரளி, வாலாஜா எஸ்.வேதகிரி, விஷாரம் இப்ராகிம் கலிமுல்லா, உள்பட நகர, ஒன்றிய, மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் 15வது வார்டு வட்ட செயலாளர் அலெக்சான்டர் நன்றி கூறினார்.    

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: