முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து முதல்வர்-அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழர்தம் பாரம்பரிய பண்பாட்டுப் பெருமைக்கு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் மூத்த நிர்வாகிகள்  மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் , தமிழர்தம் கலாச்சார உரிமையும், பெருமையும் ஆன ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் மாணவச் செல்வங்களும், இளைஞர்களும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா  எண்ணப்படி,  பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை வெளியிட்டதோடு, கழகப் பொருளாளரும், முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம், புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் .

அவசர ஆலோசனை :
மேலும், கழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட குழுவை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்து இந்திய குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து, ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவை, கழகப் பொருளாளரும், முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தார் -

மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோளான ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவரும், வனத்துறை அமைச்சருமான  திண்டுக்கல் சி. சீனிவாசன், கழக தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான  எடப்பாடி கே. பழனிச்சாமி, கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்